அமீரக கொடி தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 3 ஆம் தேதி அமீரக கொடி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையடுத்து அமீரகத்தின் தியாகிகளை இந்நாளில் நாம் நினைவுகூர்வோம் என அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமை துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.
அமீரகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளோடு இன்று கொடி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அமீரக குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கலந்துகொண்டுவருகின்றனர்.
#MohamedbinZayed: The #UAEflag is, and will always remain, a symbol of peace and progress. On #FlagDay, we remember the martyrs who sacrificed their lives to defend their flag, and we remind ourselves of the UAE’s determination to be at the forefront of development#WamNews pic.twitter.com/EEduAcHv2S
— WAM English (@WAMNEWS_ENG) November 3, 2020
இந்நிலையில் அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” அமீரக கொடியானது அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சின்னமாக இருக்கிறது. இந்த கொடி தினத்தில் அமீரகத்தின் கொடியை காக்க தங்களது இன்னுயிரை அளித்த பெருமைக்குரியவர்களை நினைவுகூர்வோம் மேலும் அமீரகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னிருத்த உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.