UAE Tamil Web

வெளிநாடுகளில் சிக்கியுள்ள குடியிருப்பாளர்களின் ரெசிடென்சி விசாவின் செல்லுபடிக் காலத்தை நீட்டித்து துபாய்..!

VISA

கொரோனா காரணமாக விடுமுறை உள்ளிட்ட காரணங்களினால் வெளிநாடுகளுக்குச் சென்ற துபாய் குடியிருப்பாளர்கள் மீண்டும் துபாய் வரமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பலருடைய ரெசிடென்சி விசாக்கள் காலாவதி ஆகி விட்டன. அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வெளியுறவுத்துறை மற்றும் குடியிருப்புக்கான தலைமை இயக்குனரகம் (GDRFA) புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள துபாய் குடியிருப்பாளர்களின் ரெசிடென்சி விசாவின் செல்லுபடிக் காலத்தை நவம்பர் 10,  2021 ஆம் தேதி வரையில் நீடிப்பதாக GDRFA தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 10, 2021 ஆம் தேதி முதல் நவம்பர் 9, 2021 வரையிலான காலத்தில் காலாவதியான, காலாவதி ஆகும் துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருப்போருக்கு இது பொருந்தும் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 20 2020 ஆம் தேதிக்கு முன்னர் அமீரகத்தை விட்டு வெளியேறி ஆறு மாத காலம் வெளிநாட்டில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல துபாயில் வழங்கப்பட்ட விசாக்களுக்கு மட்டுமே இந்த காலநீட்டிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் சிக்கியுள்ள குடியிருப்பாளர்கள் தங்களது விசா குறித்து அறிய இந்த லிங்க்கைப் பயன்படுத்தவும்.

VISA
7 Shares
Share via
Copy link