UAE Tamil Web

இந்த தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அமீரகம் வரலாம் – நீங்கள் போட்டுக்கொண்டது என்ன..?

vaccine

இந்தியா, பாகிஸ்தான் உட்பட அமீரக அரசினால் பயணத்தடை விதிக்கப்பட்ட 6 நாடுகளில் உள்ளவர்களுள் அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் வரலாம் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

யார் யாரெல்லாம் அமீரகம் வரலாம்? அவர்களுக்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த விதிமுறைகளில் முக்கியமானது, செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் கட்டாயம் அமீரக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறவேண்டும் என்பதாகும்.

அமீரக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியல் பின்வருமாறு:

  • பைசர்
  • சினோபார்ம்
  • ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனக்கா அல்லது கோவிஷீல்டு
  • மாடர்னா
  • ஸ்புட்னிக் வி

மேற்கண்டவற்றுள் கோவிஷீல்டே இந்தியாவில் அதிக அளவில் போடப்பட்டு வருகிறது. நீங்கள் எந்த தடுப்பூசியை எடுத்திருக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

பின் குறிப்பு: ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜெனக்கா தடுப்பூசியும் கோவிஷீல்டும் ஒன்றுதான் என சமீபத்தில் அமீரக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

vaccine
29 Shares
Share via
Copy link