UAE Tamil Web

அமீரகத்தின் அனைத்து ரெசிடன்சி விசா பயணிகளும் துபாய் செல்ல அனுமதி – எமிரேட்ஸ் அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளில், துபாய் ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே துபாயில் தரையிறங்க முடியும் என்கிற கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. அமீரகத்தில் உள்ள எந்த ஒரு எமிரேட்டின் ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்களும் துபாய்க்கு விமானம் மூலம் வரலாம் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுஜைரா ரெசிடன்சி விசா பயணி ஒருவர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு விசிட் விசா, எம்ப்ளாயிமெண்ட் விசா உள்ளிட்டவைகளுடன் துபாய் பயணிக்கலாம் என்றும் எந்த ஒரு எமிரேட்டின் ரெசிடன்சி விசா வைத்திருந்தாலும் GDRFA அல்லது ICA ஒப்புதலுடன் துபாய் வரலாம் எனவும் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

4 Shares
Share via
Copy link