UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியாவிலிருந்து டூரிஸ்ட் விசாவில் மக்கள் துபாய் வரலாம் – ஆனால் இதெல்லாம் கட்டாயம்..!

Stock-Dubai-airport-

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, உகாண்டா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள் டூரிஸ்ட் விசாவில் துபாய் வருவதற்கான விதிமுறைகளை ஃபிளை துபாய் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றைக் கீழே காண்போம்.

  • வெளியுறவு மற்றும் குடியிருப்புக்கான தலைமை இயக்குநரகத்திடம் (GDRFA) ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
  • துபாய் வருவதற்கு கடந்த 14 நாட்கள் பயணி இந்தியாவில் வசித்து இருக்கக்கூடாது அல்லது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக கடந்த 14 நாட்களுக்குள் பயணித்திருக்கக்கூடாது (டிரான்ஸிட்).
  • பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். (இந்த 48 மணி நேரக் கணக்கு கொரோனா மாதிரி சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து கணக்கிடப்பட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்).
  • PCR பரிசோதனை சான்றிதழில் QR Code இருத்தல் வேண்டும். சான்றிதழ் ஆங்கிலம் அல்லது அரபி மொழியில் இருத்தல் வேண்டும்.
  • பயண புறப்பாட்டிற்கு முன் ஆறு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ரேபிட் பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் அவசியம்.
  • விமான நிலையத்தில் மீண்டும் ஒரு ரேபிட் பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,”நீங்கள் அமீரக குடியிருப்பாளர், GCC குடிமகன் அல்லது வருகையின்போது விசிட் விசா பெறுபவராக இருந்தால் நீங்கள் எங்கே இருந்து உங்களை பயணத்தைத் துவங்கி இருந்தாலும் உங்களுடைய துபாய் பயணத்திற்கு முன்னர் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் பிசிஆர் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேலும் ஒரு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.

ட்விட்டரில் தனது வாடிக்கையாளர்களின் சந்தேகத்திற்கு பதில் அளித்த துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் எமிரேட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் இதனை உறுதிசெய்துள்ளது.

Stock-Dubai-airport-
32 Shares
Share via
Copy link