UAE Tamil Web

“இந்தியர்களை அமீரகம் திரும்ப அனுமதி அளித்ததற்கு நன்றி”- அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்த இந்திய துணைத் தூதரகம்..!

Indian-Consulate-in-Dubai

இந்தியா, பாகிஸ்தான் உட்பட அமீரக அரசினால் பயணத்தடை விதிக்கப்பட்ட 6 நாடுகளில் உள்ளவர்களுள் அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் வரலாம் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

யார் யாரெல்லாம் அமீரகம் வரலாம்? அவர்களுக்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இதனையடுத்து, அமீரக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்க செய்தி எனவும், இதனால் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் பயன்பெறுவார்கள் எனவும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

“இந்தியர்களை மீண்டும் அமீரகம் வர அனுமதியளித்ததற்கு நன்றி” எனவும் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Indian-Consulate-in-Dubai
15 Shares
Share via
Copy link