UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா, இலங்கையிலிருந்து மக்கள் அமீரகம் வரலாம் – ஆனால் தற்போது இவர்கள் மட்டுமே வரலாம்..!

Stock-Abu-Dhabi-airport-passengers_

ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் இந்தியா, இலங்கை ஆகியா நாடுகளில் இருந்து குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அமீரகம் வரலாம் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான், நைஜீரியா, உகாண்டா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலக்களிக்கப்பட்ட பிரிவினர்

அமீரக அரசினால் தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து கீழ்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் அமீரகம் வரலாம்.

  • மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் உட்பட அமீரக சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்கள்.
  • அமீரக கல்வி அமைப்புகளில் பணிபுரிபவர்கள்: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்.
  • அமீரக மாணவர்கள்
  • மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப விரும்புபவர்கள். ஆனால் அவர்களிடத்தில் செல்லுபடியாகும் விசா இருத்தல் வேண்டும்.
  • பெடரல் மற்றும் உள்ளூர் அரசுகளில் பணிபுரிபவர்கள்.

பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

  • செல்லுபடியாகும் ரெசிடென்சி விசாவினை வைத்திருத்தல் வேண்டும்.
  • கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருக்க வேண்டும்.
  • பயண தேதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியின் இரண்டவது டோசை எடுத்திருக்க வேண்டும்.
Stock-Abu-Dhabi-airport-passengers_
81 Shares
Share via
Copy link