UAE Tamil Web

முடிவிற்கு வந்த குழப்பம்; இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் அமீரகம் வரலாம்: ஆனால் இதை மறந்துடாதீங்க..!

NAT-INDIA-AIRPORT-

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் ஆகஸ்டு 5 ஆம் தேதிமுதல் அமீரகம் திரும்ப அனுமதியளிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இருப்பினும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் பல்வேறு சந்தேகங்களை மக்களுக்கு ஏற்படுத்தியது. நம்முடைய இணையதளத்திலும் பயணிகளின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துவருகிறோம்.

பயணிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களில் முக்கியமானது, இந்தியாவில் தடுப்பூசி எடுத்துகொண்டவர்கள் அமீரகம் வரலாமா? என்பதுதான். இதற்கு தற்போது ICA பதிலளித்துள்ளது.

அமீரகம் திரும்பும் இந்தியர்கள் தங்களது தாயகத்தில் அமீரக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருக்கவேண்டும் என தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய அமீரக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “ICA வின் இணையதளத்திலோ அல்லது ICA அப்ளிகேஷனிலோ சென்று பயணிகள் தங்களது பாஸ்போர்ட், தடுப்பூசி சான்றிதழ்கள் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவு செய்துகொள்ளவேண்டும்” என்றார்.

இது அவர்களது Alhosn அப்ளிகேஷனில் பிரதிபலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல அமீரகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இது கட்டாயமில்லை எனவும் அவர்கள் தேவைப்படும் பட்சத்தில் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 15 ஆம் தேதிமுதல் மக்கள் இந்த பதிவு செய்யும் பணிகளைத் துவங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திலிருந்து துபாய் வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என நேற்று எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

NAT-INDIA-AIRPORT-
16 Shares
Share via
Copy link