UAE Tamil Web

இந்தியா, இலங்கையிலிருந்து அமீரகம் வருவோர் கவனத்திற்கு: ரேபிட் PCR பரிசோதனைக்கான நேரத்தில் மாற்றம்..!

AIRPORT (3)

இந்தியா, பாகிஸ்தான் போன்ற அமீரக அரசால் தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து துபாய் திரும்பும் பயணிகள் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன் ரேபிட் பிசிஆர் சோதனையை எடுக்கலாம் என அமீரக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதுவரை, பயணிகள் துபாய்க்கு விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட எதிர்மறை ரேபிட் பிசிஆர் சோதனை முடிவைக் காட்ட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்களின் செயல்முறைகளை இலகுவாக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பதாக டிராவல் ஏஜெண்டுகளுக்கு அளிக்கப்பட்ட GCAA வின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையானது பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா, நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து துபாய் திரும்புவோருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் மூலக்கூறு அடிப்படையிலான சோதனை மூலமாக (molecular diagnostic testing) ரேபிட் பரிசோதனையானது எடுக்கப்படவேண்டும், பயணிகள் இடையே சமூக இடைவெளி நிலவ வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

AIRPORT (3)
7 Shares
Share via
Copy link