UAE Tamil Web

பனிமூட்டம் மிக அதிகமாக இருக்கும் ; வேகம் வேண்டாம் ; எச்சரிக்கும் வானிலை ஆய்வுமையம்..!

FOG

அபுதாபியில் இன்று அதிகாலை 12.10 மணி முதல் காலை 9.30 மணி வரையில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் எனவும் இதனால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படலாம் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து அபுதாபி காவல்துறை அராபிக், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வாகனவோட்டிகள் மிக கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும் எலெக்ட்ரானிக் தகவல் பலகைகளில் குறிப்பிட்டுள்ள வேகத்தில் வாகனங்களை இயக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திற்கு மிகாமல் வாகனவோட்டிகள் வாகனங்களை இயக்குமாறு அபுதாபி காவல்துறை தெரிவித்திருக்கிறது.

நாளின் பிற்பகுதியில் மேற்குப் பகுதியிலும் கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். நண்பகலுக்குப் பிறகு சில இடங்களில் மழைபொழிய வாய்ப்பிருப்பதாகவும் NCM தெரிவித்திருக்கிறது.

நாட்டின் உட்பகுதியில் அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம்.

வடகிழக்கிலிருந்து வடமேற்குப் பகுதிகளுக்கு மிதமான காற்று வீசும்.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கலாம்.

FOG
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap