அமீரகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. இதன்காரணமாக இன்று காலை 11.30 மணிவரையில் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் இருக்கலாம் என தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அபுதாபியின் புறநகர்ப் பகுதிகளில் வேகக் கட்டுப்பாடு இயல்புநிலைக்குத் திரும்பியதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் அபுதாபியில் இருந்து வெளியே செல்லும் மற்றும் அபுதாபிக்கு வரும் வாகனங்கள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திற்கு மிகாமல் பயணிக்கவேண்டும் என காவல்துறை எச்சரித்திருக்கிறது.
#تنبيه #ضباب #المركز_الوطني_للأرصاد #Alert #Fog_Alert #NCM pic.twitter.com/v5IcKu3N9A
— المركز الوطني للأرصاد (@NCMS_media) February 13, 2021
ஷேக் கலீபா பின் சயீத் சர்வதேச சாலை (அல் மஃப்ராக் – அல் ருவைஸ்), மக்தூம் பின் ரஷீத் சாலை அபுதாபி – துபாய் (அல் மஃப்ராக் – அல் ஷஹாமா), அபுதாபி – அல் அய்ன் சாலை (அல் கஸ்னா – அல் சாத்), ஸ்வேய்ஹான் சாலை (அபிதாபி – சயீத் மிலிட்டரி சிட்டி) ஆகிய சாலைகளில் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
#عاجل | #تنويه #ضباب
عودة السرعات على طريق الشيخ خليفة بن زايد الدولي (المفرق – الرويس) الى السرعات المحددة مع تمنياتنا لكم بالسلامة.#شرطة_أبوظبي#Urgent | #Warning #Fog
Speed limit on Shk. Khalifa Bin Zayed Intl. road (Al Mafraq – Al Ruwais) are back to normal, Drive Safely— شرطة أبوظبي (@ADPoliceHQ) February 13, 2021
வாகனவோட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் எனவும், எலெக்ட்ரானிக் தகவல் பலகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வேக அளவுகளை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் வாகனங்களை இயக்குமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
#عاجل | #تحذير #ضباب
تم تفعيل منظومة خفض السرعات إلى 80 كم/س على طريق الشيخ مكتوم بن راشد، ابوظبي – دبي ( المفرق – الشهامة )#Urgent | #Warning #Fog
Speed reduction system activated to 80 Km/h on Maktoum Bin Rashid road Abu Dhabi – Dubai ( Al Mafraq – Al Shahama )— شرطة أبوظبي (@ADPoliceHQ) February 12, 2021
பனிமூட்ட நேரங்களில் முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைபிடிக்காத வாகனவோட்டிகளுக்கு பெடரல் போக்குவரத்து விதியின்படி 500 திர்ஹம்ஸ் அபராதமும் 4 கறுப்புப் புள்ளிகளும் வழங்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
#TrafficUpdate | Fog causes low visibility across some internal & external routes in #Dubai. Please stay focused on the road, reduce your speed, & maintain a safe distance.
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) February 13, 2021