UAE Tamil Web

“எங்களின் உலகை திருப்பித் தாருங்கள்” – கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகள்!

இன்று பல குழந்தைகள் ஆன்லைனில் பிறந்தநாள் மெழுகுவர்த்திகளை ஊதுகிறார்கள். தன் வகுப்பு நண்பர்களை திரை மூலமே காண்கிறார்கள்.

ஐந்து வயது சாரா பள்ளிக்கு சென்றதில்லை. அவள் தனது வகுப்பு தோழர்களையும், ஆசிரியர்களையும் திரையில் மட்டுமே சந்திக்கிறாள்.

பதினொரு மாதக் குழந்தையான திதிக்ஷா தன் அப்பா, அம்மா மற்றும் ஆயாவைத் தவிர,முககவசம் இல்லாத எந்த மனித முகங்களையும் பார்த்ததில்லை.

இரண்டு வயது ஆலிஸ் இன்னும் தன் வயது குழந்தையுடன் விளையாடவில்லை. அவளும் பெரிய கூட்டத்திற்கு சென்றதில்லை.

எட்டு வயதான ஆதி தனது பிறந்தநாளை ஆன்லைனில் கொண்டாடினார். அவர் மெழுகுவர்த்தியை ஏற்றி கேக் வெட்டிய போது, அவரது நண்பர்கள் திரையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரு தொற்றுநோயின் நிழலில் வளரும் கோவிட் குழந்தைகள் இவர்கள். அவர்களின் மடிக்கணினிகள் அவர்களின் பள்ளி வளாகங்கள். அவர்களின் ஆசிரியர்கள் ஆன்லைனில் வீடியோ வாயிலாக, தினமும் தங்கள் திரைகளில் பாடங்களை அலசுவார்கள். இது மட்டுமல்ல குழந்தைகளின் வகுப்பறைகளும், விளையாட்டு மைதானங்களும் ஒரே மாதிரியானவை.

எப்போது நம்மை விட்டு செல்லும் என்ற எந்தவொரு முடிவும் இல்லாத உயிரை கொல்லும் கோவிட் வைரசால், குழந்தைகளின் உலகம் நான்கு சுவருக்குள் சுருங்கி விட்டது. இந்தக் குழந்தைகள் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை வாழ்க்கையை மாற்றும் நோய்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளை அழுக்காக்குவதை விட அடிக்கடி கைகளை கழுவி வளர்கிறார்கள்.பள்ளி பேருந்தில் உட்காரவோ அல்லது வகுப்பறைக்குள் நுழையவோ அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தொற்றுநோயால் அழிக்கப்பட்ட உலகில், கொரோனா காலத்தில் வளரும் குழந்தைகளுக்கு இது இயல்பானது அல்ல. ரொம்ப சாதாரணமானது. டிசம்பர் 2019 தொடக்கத்தில் சீனாவின் வுஹானில் SARS-CoV-2 தொற்றுநோய் தோன்றிய பிறகு பிறந்த குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை இதுதான்.

பெரியவர்களாகிய நாம் தலையை சுற்றிக் கொண்டு போராடுவது ஒரு விசித்திரமான உலகம். லாக்டவுன், பயணக் கட்டுப்பாடுகள், வீட்டிலிருந்தபடி வேலை செய்வது, பயம், மரணம் மற்றும் நோய் நிறைந்த உலகில் தான் குழந்தைகள் வளர்கின்றனர். மேலும் அது அவர்களின் மன மற்றும் சமூக வளர்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொலைநோக்குடையது. இதனால் சுகாதார நிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.

பள்ளிகள் மூடல்

பள்ளிகள் மூடல் மற்றும் நீண்ட கால ஆன்லைன் கற்றல் ஆகியவை குழந்தைகளை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. யுனெஸ்கோவின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 1.6 பில்லியன் குழந்தைகளின் கல்வி, இதுவரை 190 நாடுகளில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் உள்ள பள்ளிகளும், 2020-2021 ஆம் ஆண்டின் பெரும்பகுதிக்கு ஆன்லைன் அல்லது ஹைப்ரிட் கற்றலுக்கு மாறியது. இது குழந்தைகளின் சமூகக் கூட்டங்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான தொடர்புகளை நீக்கியது.

தற்போது, அமீரகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மீண்டும் ஆன்லைன் கற்றலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளன. மீண்டும் நாட்டில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,700 ஐத் தாண்டியுள்ளது.

ஆன்லைன் கற்றலுக்கு மீண்டும் மாறுவது பல குழந்தைகளுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

துபாயில் உள்ள இந்தியப் பெற்றோரான ஷிவானி மகேஸ்வரி, “தனது 9 வயது மகன் ஆதி ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகளுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு முன்பு நேரடி வகுப்புகளைத் தொடங்க வேண்டியிருந்தது. இது ஒரு பெரிய மாற்றம்” என்று தெரிவித்துள்ளார்.

அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணைய அறிவுறுத்தலின்படி,  குழந்தைகள் கடந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலம் படித்துக் கொண்டிருந்தனர். இருந்தாலும் அவர்கள் தொற்றுநோயை வீட்டிற்கு கொண்டு வருவார்கள் என்று நாங்கள் மிகவும் பயந்தோம் என்கிறார், மகேஸ்வரி.

7 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை விட, “அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை” தனது மகனைப் பாதித்ததாகவும் அவர் கூறினார்.

ஆதி, ஆன்லைனில் யோகா வகுப்புகளை கற்றுக்கொண்டு இருக்கிறார். அதே போல், நண்பர்களுடன் பழகாமல் வீட்டில் தனியாக இருப்பதும் பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்துகிறது. இதனால் ஆதியை பள்ளியில் உற்சாகமாக ஊக்குவிக்க பெற்றோர்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

“கொரோனா காரணமாக, ஆன்லைன் வகுப்பு ஆரம்பத்ததில் இருந்து, தனது மகன், வெளி மக்களை சந்திக்க வெட்கப்படுவதாக மகேஸ்வரி குறிப்பிட்டார். அதே நேரம், அவரது பிறந்தநாளை ஆன்லைனில் கொண்டாடினோம். அங்கு மற்ற குழந்தைகளுடன் சில ஆன்லைன் கேம்கள் மற்றும் கதை சொல்லி விளையாடினான். பெற்றோராக, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், அவர்களின் சமூகத் திறன்களை எளிதாக்குவதற்கும் அவர்களின் உலகை புரிந்துக்கொள்ள வேண்டும்,” என்று ஒப்புக்கொண்டார் மகேஸ்வரி.

குறைந்தபட்ச சமூக தொடர்புகள்

குழந்தைகளுக்கு லேசான கோவிட் அறிகுறிகள் இருப்பதாக நம்பப்பட்டாலும், தகவல்தொடர்பு திறன்களை மேம்படுத்துவதற்கு அவசியமான மதிப்புமிக்க சமூக தொடர்புகளை தொற்றுநோய் கொள்ளையடித்துள்ளது.

துபாயில் உள்ள தொழிலதிபரான தீப் சவுத்ரி, “இந்த தொற்றுநோய் தனது மகளுக்கு நீண்ட காலத்திற்கு என்ன செய்யும் என்று கவலைப்படுகிறேன். அவளுக்கு 11 மாதங்கள் தான் ஆகிறது. அவளைப் பாதுகாக்க நாங்கள் எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால் அவள் அம்மா, அப்பா, ஆயாவைத் தவிர பிறரைப் பார்க்காமல் வளர்வது ஆரோக்கியமாக இல்லை. அவள் இன்னும் தன் தாத்தா பாட்டியை சந்திக்கவில்லை,” என வருத்தப்படுகிறார், சவுத்ரி.

பெரிய குழந்தைகள் ஏற்கனவே சமூக தனிமைப்படுத்தலில் இருந்து மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் காட்டுகின்றனர்.

“எனது நண்பர்களைப் பார்ப்பதை நான் இழக்கிறேன். பள்ளி இல்லாத போது, என்னால் அவர்களுடன் விளையாட முடியாது” என்று 6 வயது ஆண்டனி கூறினார். நான் கால்பந்தை விரும்புகிறேன். எனது பள்ளியில் பெரிய விளையாட்டு மைதானங்கள் உள்ளன. வீட்டில் போதிய இடமில்லை” என்கிறார், விளையாட முடியாமல் தவிக்கம் ஆண்டனி.

8 வயதான அவரது சகோதரி கேத்தரின், தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை தவறவிட்டார்.

“கேத்தரின் மனநிலை பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் அவளைத் தொந்தரவு செய்வதைப் பற்றி பேச மறுக்கிறாள்.அவளது சகோதரன் அதிக சுறுசுறுப்பானவர். அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதில் சிரமம் உள்ளது ”என்கின்றனர், அவளது பெற்றோர்.

மன அழுத்தம்

உலகெங்கிலும் உள்ள குழந்தை உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தொற்றுநோய் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எச்சரித்துள்ளனர்.

கொரோனா தொற்று காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், அதற்கு முன்பாக பிறந்த குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளிடம் சாமர்த்தியமாக‌ பேசும் திறன், நுண்ணறிவு என‌ ஒட்டு மொத்த அறிவாற்றல் செயல் திறனில் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

குழந்தைகளின் சிறப்பான அறிவாற்றல் வளர்ச்சிக்கு பிறந்ததில் இருந்து முதல் சில ஆண்டுகள் மிக முக்கியமானது. ஆனால், கொரோனா காலமான இந்த நேரத்தில் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட‌ மன அழுத்தம் காரணமாக, குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாதது, வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல முடியாதது, வெளி உலக தொடர்பு குறைவு, விளையாட்டு நிகழ்வுகள் குறைவு , நிதி பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் இந்த குழந்தைகள் செயல் திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக பிரவுன் பல்கலைக் கழகத்தின் குழந்தைகள் மருத்துவத்திற்கான பேராசிரியர் சியான் டியோனி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ மையம் ஹாம்பர்க்-எப்பன்டோர்ஃப் நடத்திய கணக்கெடுப்பில், மூன்று குழந்தைகளில் ஒருவர் தொற்றுநோய் தொடர்பான கவலை அல்லது மனச்சோர்வினால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையில், துபாயில் உள்ள அல் ஜலீலா குழந்தைகள் மருத்துவமனையின் பொழுதுபோக்கு சிகிச்சை நிபுணரான சாரா கோஸ்டா, மன அழுத்தம், பதட்டம் மற்றும் கற்றல் சிக்கல்களுடன் போராடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறார்.

“குழந்தைகள் மத்தியில் பயமும் பதட்டமும் அதிகம். அவர்கள் பயத்தை அனுபவிக்கிறார்கள். பலர் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சரியாக கவனிக்கப்படாவிட்டால் அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று கோஸ்டா கூறினார்.

குழந்தைகளைக் கையாளும் போது அறிவாற்றல், உணர்ச்சி, உடல் மற்றும் உணர்ச்சிப் பிரச்சினைகளைத் தீர்க்க விளையாடுவதைப் பயன்படுத்துவதாக அவர் கூறினார். இது குழந்தைகள் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு முழுமையான அணுகுமுறையாகும்.

“நண்பர்கள் நோய்வாய்ப்படுவார்கள் என்பதால் அவர்களைத் தொடவோ அல்லது கட்டிப்பிடிக்கவோ கூடாது. கைகளைக் கழுவச் சொல்லி பயத்தின் சூழலை உருவாக்கினால், அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பை கற்பிக்க முடியும். மேலும் சுகாதாரம் என்பது சுய கவனிப்பின் ஒரு வடிவமாகும். எந்த பயமும் இல்லாமல், குழந்தைகளுக்கு தகவல்களை கொடுத்து விட வேண்டும் ”என்று கோஸ்டா கூறினார்.

முகமூடியின் பின்னால் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது

குழந்தை உளவியலாளர் ஆண்ட்ரியா டோசாட்டோ கூறுகையில், முககவசங்களை அணிவது குழந்தைகளின் உணர்ச்சிகளைக் கற்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். வைரஸுக்குப் பயந்து உலகம் முககவசத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும்போது, முகபாவனைகள் மூலம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

“உணர்ச்சிகளை முழுமையாக, தெளிவாக மற்றும் தடைகள் இல்லாமல் படிக்கும் திறன் அனைத்து குழந்தைகளுக்கும் தேவை. குழந்தையின் கேட்கும் திறனைப் பொருட்படுத்தாமல், மொழி கையகப்படுத்தும் கட்டத்தில் உதடு வாசிப்பு அவசியம். எழுதக் கற்றுக் கொள்ளும்போது இது மிகவும் அவசியமாகிறது. ஆசிரியரின் வாயின் வெளிப்படையான அசைவுகள் மூலம் தெளிவான, எளிமைப்படுத்தப்பட்ட கட்டளையின் மூலம் குழந்தை சரியாக எழுதக் கற்றுக்கொள்கிறது ”என்று டோசாட்டோ கூறினார்.

முககவசம் அணிந்த ஆசிரியர் மூலம் குழந்தைகள் எதையும் கற்றுக்கொள்ள முடிவதில்லை. வைரஸிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களிடம் பயம் மற்றும் கோவமான நடத்தைகளை உருவாக்காமல் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கிறார்.

“தங்கள் நண்பர்களுடன் பேனாவைப் பரிமாறிக்கொள்வதோ, கைகுலுக்கிக்கொள்வதோ அல்லது கட்டிப்பிடிப்பதோ சாதாரண விஷயமல்ல என்று நினைத்து அவர்கள் வளர்வதை நாங்கள் விரும்பவில்லை. நாம் சரியான சமநிலையை அடைய வேண்டும், ”என்று துபாயில் உள்ள அமெரிக்க மனநல மற்றும் நரம்பியல் மையத்தில் பணிபுரிந்த டோசாட்டோ கூறினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap