லெபனானில் வசித்துவரும் அமீரக குடிமக்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை வேகத்தில் லெபனானை விட்டு வெளியேறுமாறு அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏமனில் நடைபெற்றுவரும் போரில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை லெபனான் தகவல் தொடர்பு அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி சில தினங்களுக்கு முன்னர் விமர்சித்திருந்தார். இதனையடுத்து சவூதி அரேபியா தனது நாட்டில் இருக்கும் லெபனான் தூதர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவரும் ஏமன் உள்நாட்டுப் போர் குறித்து லெபனான் அமைச்சர் பேசியதைக் கண்டித்து அமீரகமும் லெபனானுக்கான தனது தூதரை நாடு திரும்புமாறு நேற்று உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், அமீரக குடிமக்கள் யாரும் லெபனானுக்கு செல்லவேண்டாம் என அமீரக அரசு வலியுறுத்தியுள்ளதாக அரசு ஊடகமான Wam செய்தி வெளியிட்டுள்ளது.
அமீரகத்தைத் தொடர்ந்து குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் லெபனானில் உள்ள தங்களது தூதர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகமாகியுள்ளது.