பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அபுதாபி காவல்துறைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்கு உள்ளானதால் இரண்டு விமானிகள் உள்ளிட்ட 4 பேர் மரணமடைந்திருப்பது அமீரகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லெப்டினன்ட் பைலட் காமிஸ் சயீத் அல் ஹோலி மற்றும் லெப்டினன்ட் பைலட் நாசர் முஹம்மது அல் ரஷிதி – மற்றும் சிவில் மருத்துவர் ஷாஹித் ஃபாரூக் குலாம் மற்றும் சிவில் செவிலியர் ஜோயல் கிவி சகரா மிண்டோ ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து இறந்தவர்களுக்கு அபுதாபி காவல்துறை அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
#نعي | بقلوب مؤمنة بقضاء الله وقدره تنعي القيادة العامة لشرطة أبوظبي أبناء الواجب المغفور لهم بأذن لله
مقدم مدرب طيار خميس سعيد الهولي
ملازم طيار ناصر محمد الراشدي
طبيب مدني شاهد فاروق غلام
ممرض مدني جويل قيوي ساكارا مينتو pic.twitter.com/AkbpKVgNQ9— شرطة أبوظبي (@ADPoliceHQ) October 2, 2021
இதுகுறித்து அபுதாபி காவல்துறையின் பொது கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,” உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் இறந்தவர்களின் ஆன்மாவை சாந்தியடையச் செய்யவும், அவர்களைப் பிரிந்துவாடும் அவர்தம் உறவினர்களுக்கு மன உறுதியை வழங்கிடவும் பிரார்த்திக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
