UAE Tamil Web

Alhosn அப்ளிகேஷனை உபயோகிக்க இனி டேட்டா இருக்கவேண்டிய அவசியமில்லை : எதிசலாட் அறிவிப்பு..!

Green Pass

ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் Alhosn அப்ளிகேஷனில் உள்ள கிரீன் ஸ்டேட்டசைக் காட்ட வேண்டும் என்ற விதிமுறை ஆகஸ்டு 20 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்தது. அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த அறிவிப்பை முன்னர் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அமீரகத்தின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கு நிறுவனமான எதிசலாட், Alhosn அப்ளிகேஷனை இயக்கி கிரீன் ஸ்டேட்டசை காட்டுவதற்கு டேட்டா ரீசார்ஜ் செய்திருக்க வேண்டிய கட்டாயமில்லை எனத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு போஸ்ட் பெய்ட் மற்றும் பிரீ பெய்ட் வாடிக்கையலாலர்களுக்கும் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் மூத்த அதிகாரி,காலித் எல்கோலி,” கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க உதவி செய்யும் நோக்கில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளோம். இன்று முதல் Alhosn அப்ளிகேஷனுக்கு zero-rated என்னும் சிறப்பை அளித்திருக்கிறோம்” என்றார்.

Green Pass
3 Shares
Share via
Copy link