UAE Tamil Web

37 வாரங்களுக்குப் பிறகு அமீரகத்தில் இன்று நடைபெற்ற ஜும்மா தொழுகை..!

UAE Friday prayers

கொரோனா காரணமாக மார்ச் மாதம் அமீரகத்தில் உள்ள மசூதிகள் மூடப்பட்டன. பின்னர் கடந்த ஜூலை மாதம் மசூதிகள் திறக்கப்பட்டாலும் தினசரி 5 வேளை தொழுகைகளுக்கு மட்டும் பிரார்த்தனையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

- Advertisment -

இந்நிலையில் 37 வாரங்கள் கழித்து மீண்டும் அமீரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. மசூதியின் மொத்த கொள்ளளவில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே இந்த ஜும்மா தொழுகையில் கலந்துகொள்ளவேண்டும் என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரார்த்தனையாளர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

அதேபோல, பிரார்த்தனையாளர்கள் தங்களுக்கான தொழுகை விரிப்புடன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வரும் பிரார்த்தனையாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்துத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி தெரிவிக்கும் விதமாக மசூதிகளில் பிரசங்கங்கள் நடைபெற்றன. மீண்டும் ஜும்மா தொழுகைக்கு அனுமதியளித்த ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாக இமாம்கள் மற்றும் பிரார்த்தனையாளர்கள் தெரிவித்தனர்.