ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணை விலை பாதிப்படையும் என எதிர்பார்க்கட்ட நிலையில் அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எரிபொருள் விலைக் குழுவான (The UAE fuel price committee) அறிவித்ததுள்ளது.
⛽ Monthly Fuel Price Announcement:
April 2022 fuel prices released by the #UAE Fuel Price Follow-up Committee pic.twitter.com/yECBLWalyV— Emarat (امارات) (@EmaratOfficial) March 31, 2022
ஏப்ரல் 1 முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.74 திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் சூப்பர் 98 பெட்ரோல் லிட்டருக்கு 3.23 திர்ஹம்ஸாக இருந்தது.
ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.62 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மார்ச்சில் 3.12 திர்ஹம்ஸாக இருந்தது.
இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.55 திர்ஹம்ஸாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் இ-பிளஸ் 91 பெட்ரோல் லிட்டருக்கு 3.05 திர்ஹம்ஸாக இருந்தது.
டீசல் விலை லிட்டருக்கு 4.02 திர்ஹமஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மார்ச்சில் 3.19 திர்ஹம்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.