ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணை விலை பாதிப்படையும் என எதிர்பார்க்கட்ட நிலையில் அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனின் இருநாட்டு மோதலால் உலகமெங்கும் பரபரப்பு நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டை நினைத்து சர்வதேச அளவில் கவலைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. அமீரகம் மற்றும் இந்தியா இந்த இருநாட்டு பிரச்சனையில் சமநிலை வகிப்பதாக தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சசில் கூட்டத்தில் அமீரகத்தின் நிரந்தரப் பிரதிநிதி லனா ஜக்கி நுசைஃப், “ரஷ்யா மற்றும் உக்ரைன் உடனடியாக போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், சர்வதேச மனிதாபியமான சட்டங்களை பின்பற்றி அப்பாவி மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும். அமீரகம் இரு நாடுகளுக்கு இடையிலான பகையை தணித்து உதவ தயாராக உள்ளது” என்றார்.
இந்த இரு நாட்டு பதற்றத்தால் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலை நிலவரம் உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் சில்லரை விலையை மாற்றி அமைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
அமீரகத்தில் திங்கட்கிழமையான இன்று மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எரிபொருள் விலைக் குழுவான (The UAE fuel price committee) அறிவித்ததுள்ளது.
⛽ Monthly Fuel Price Announcement:
March 2022 fuel prices released by the #UAE Fuel Price Follow-up Committee pic.twitter.com/fAaL2q8iGX— Emarat (امارات) (@EmaratOfficial) February 28, 2022
மார்ச் 1 முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.23 திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் சூப்பர் 98 பெட்ரோல் லிட்டருக்கு 2.94 திர்ஹம்ஸாக இருந்தது.
ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.12 திர்ஹமஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிப்ரவரியில் 2.82 துர்ஹம்ஸாக இருந்தது.
இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.05 திர்ஹம்ஸாக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் இ-பிளஸ் 91 பெட்ரோல் லிட்டருக்கு 2.75 திர்ஹம்ஸாக இருந்தது.
டீசல் விலை லிட்டருக்கு 3.19 திர்ஹமஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிப்ரவரியில் 2.88 துர்ஹம்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.