புஜைராவில் வாகனவோட்டிகள் தங்களது போக்குவரத்து அபராதங்களை 50% தள்ளுபடியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரக தேசிய தினத்தினை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நவம்பர் 25 ஆம் தேதிக்கு முன்னர் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் எனவும் நவம்பர் 28 துவங்கி அடுத்த 50 நாட்களுக்குள் மக்கள் தங்களது அபராதத் தொகையை தள்ளுபடியில் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஜைராவின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஹமாத் பின் முகமது அல் ஷார்கி அவர்களின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன் ஆகிய எமிரேட்களிலும் இதுபோலவே போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடியானது அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.