UAE Tamil Web

வீட்டு வேலைக்கு என்றுதான் கூட்டி வந்தார்கள்.. இளம்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..!

jail

அஜ்மானில் ஒரு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற குற்றத்திற்காக ஆசியாவைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

28 வயதுடைய பெண் ஒருவர் வீட்டு வேலை செய்வதற்காக அமீரகம் வந்துள்ளார். இதையடுத்து வீட்டு வேலை செய்ய வந்த பெண் ஃபேஸ்புக் மூலமாக மற்றொரு பெண்ணிடம் பழகி உள்ளார். அப்படி பழகும்போது என்னுடைய ஸ்பான்சர் மிகவும் தரக்குறைவாக நடத்துகிறார் என்று புலம்பியிருக்கிறார். இதைக் கேட்ட அந்தப் பெண்ணோ இதைவிட அதிக சம்பளத்திற்கு வேறொரு வீட்டு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளாள்.

அவள் கூறியதற்கு இணங்கி, ஏற்கனவே வேலை செய்யும் இடத்தில் இருந்து தப்பித்து பேஸ்புக்கில் பழகிய பெண்ணிடம் தஞ்சம் புகுந்திருக்கிறாள் வீட்டு வேலைக்கு வந்த பெண்.

ஃபேஸ்புக்கில் பழக்கமாகிய அந்தப் பெண் அதிக சம்பளத்திற்கு வீட்டு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து, அவளது ஃபிளாட்டில் தங்கவைத்து அவளிடமிருந்த செல்போன், அடையாள அட்டை, துணிமணி போன்றவற்றை திருடி சென்றுவிட்டாள். இதையடுத்து மிகுந்த மன வேதனையில் இருந்த அந்த பெண் அங்கு மேலும் 5 பெண்களை பார்த்துள்ளார்.

அவர்களையும் இதே பாணியில் வீட்டு வேலைக்கு என்று அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதை தெரிந்து கொண்டு, உடனே அங்கிருந்த செல்போன் ஒன்றை திருடி அதன் மூலமாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தனது இருப்பிட தகவல்களையும் (location) அனுப்பியுள்ளார். இத்தகவலை உறுதிபடுத்த அந்த இடத்திற்கு விரைந்த CID அதிகாரிகள், அங்கிருந்த பெண்கள் அனைவரையும் மீட்டு, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலையும் கைது செய்து அஜ்மான் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற விசாரணையில் பெண் கடத்தல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தல் போன்ற குற்றங்களுக்காக 6 பேர் கொண்ட கும்பலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

jail
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap