UAE Tamil Web

அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் – வாகன ஓட்டிகளுக்கு ஆலோசனை வழங்கிய போக்குவரத்து ஆணையம்!

Road 1

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் எக்ஸ்போ 2020 க்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.

அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் எக்ஸ்போவின் பார்க்கிங் நுழைவாயிலில் தாமதத்தை எதிர்பார்க்குமாறு அவர்களுக்குத் தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ஐடிசி), இன்று அபுதாபியில் சாலைகளை மூடுவதாக  அறிவித்துள்ளது.

road

ICT தனது சமூக வலைதளத்தில் சாலை மூடுவது குறித்தும்,  மற்றும் மாற்று வழிகளின் வரைபடத்தையும் பகிர்ந்துள்ளது.


இந்த கொண்டாட்ட பயணம் அபுதாபியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகங்களில் தொடங்கி 111 கிமீ தொலைவில் எக்ஸ்போ 2020 துபாயில் முடிவடையும். அமெச்சூர் மற்றும் தொழில் வல்லுநர்கள், குடிமக்கள் மற்றும் அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் GCC குடிமக்கள் ஆகியோர் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் சுற்றுலா விழிப்புணர்வு குறித்தும், கல்வி தொடர்பாக தகவல்களும் இடம்பெறும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap