அமீரகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, நேற்று 150 ஜோடிகள் மற்றும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் – ஷேக்கா ஃபக்ரா திருமணம் நடைபெற்றது.
ஷேக்கா ஃபக்ரா, ஷேக் கலீஃபா பின் ஹம்தான் பின் முகமது அல் நஹ்யான் அவர்களுடைய மகளாவார். இந்த திருமண வைபவத்தில் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், உச்ச சபையின் உறுப்பினரும் ராஸ் அல் கைம்மாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் நேரலையில் இந்த திருமண வைபத்தைக் கண்டனர். இதுகுறித்து துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். 150 ஜோடிகள் மற்றும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் – ஷேக்கா ஃபக்ரா திருமணம் அமீரக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதிப்பிற்குரிய அல் நஹ்யான் மற்றும் மணமக்களின் தாய் தந்தையருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,” என்னுடைய சகோதரர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் 150 புதுமண தம்பதிகளுக்கும் எனது வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். திறமையான ஆட்சியின் கீழ் அமீரகம் மகிழ்ச்சியின் மண்ணாகத் திகழ்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
نبارك لأخي الشيخ حمدان بن محمد بن زايد آل نهيان و150 عريساً من أبناء الإمارات الذين شاركناهم فرحتهم بالزواج في مختلف أنحاء الإمارات … دامت الإمارات عامرة بالأفراح والمسرات في ظل قيادتنا الرشيدة. pic.twitter.com/Doaw79tBIV
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) November 10, 2021
