அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் சிறைகளில் உள்ள 672 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த சிறைக்கைதிகளை விடுவிக்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருவதாக அமீரக அரசு ஊடகமான Wam தெரிவித்திருக்கிறது.
முன்னதாக இவ்வாரத் துவக்கத்தில் அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபி சிறைகளில் வாடும் 870 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதேபோல ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆட்சியாளர்களும் சிறைக் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.