UAE Tamil Web

UAE50 : விமான டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடியை அறிவித்தது விஸ் ஏர் அபுதாபி..!

WIZZ

அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் விஸ் ஏர் அபுதாபி விமான கட்டணத்தில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது. wizzair.com அல்லது விமான நிறுவனத்தின் அப்ளிகேஷன் மூலமாக வாடிக்கையாளர்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22, 2021 ஆம் தேதிக்குள் விஸ் ஏர் விமானம் செல்லும் அனைத்து விமான ரூட்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அமீரகத்தின் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு புகைப்படப் போட்டி ஒன்றினையும் இவ்விமான நிறுவனம் நடத்துகிறது. அமீரகத்தின் பிரபலமான இடங்களை புகைப்படமெடுத்து #UAE50WithWIZZ என்ற ஹேஷ்டாக்கைப் பயன்படுத்தி Wizzair ஐ அதில் tag செய்யவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 50 நபர்களுக்கு அவர்களது பயணத்திற்கான ரிட்டர்ன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் அந்நிறுவனத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடப்படும்.

விஸ் ஏர் விமானங்கள் இயக்கப்படும் நகரங்கள்

  • அலெக்ஸாண்டிரியா (எகிப்து)
  • அல்மாட்டி (கஜகஸ்தான்)
  • ஏதென்ஸ் (கிரீஸ்)
  • பாகு (அஜர்பைஜான்)
  • பெல்கிரேட் (செர்பியா)
  • குட்டைசி (ஜார்ஜியா)
  • கெய்வ் (உக்ரைன்)
  • மனமா (பஹ்ரைன்)
  • மாஸ்கோ (ரஷ்யா)
  • மஸ்கட் (ஓமன்)
  • ஒடேசா (உக்ரைன்)
  • சரஜெவோ (போஸ்னியா)
  • சோஹாக் (எகிப்து)
  • டெல்-அவிவ் (இஸ்ரேல்)
  • டிரானா (அல்பேனியா)
  • யெரெவன் (ஆர்மேனியா).

WIZZ Flex சேவை மூலமாக உங்களுடைய விமான டிக்கெட்டை பயணத்திற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு கூட கேன்சல் செய்துகொள்ளலாம். இதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது எனவும் முழுத் தொகையும் வாடிக்கையாளரின் விஸ் கிரெடிட் பக்கத்தில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WIZZ
1 Share
Share via
Copy link