முதலீட்டளர்கள், தொழிலதிபர்கள், அறிவியல், கலை, ஆராய்ச்சி, கல்வியில் சிறந்த மாணவர்கள் என ஒவ்வொரு குறிப்பிட்ட துறைகளில் சாதித்த நபர்களுக்கு 10 வருடங்களுக்கான கோல்டன் விசாவை அமீரக அரசு வழங்கிவருகிறது.
அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான கேபினெட் குழு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று துபாயில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறை இயக்குனரகத்தின் (GDRFA) தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் அப்துல்லா அகமது அல் மர்ரி,” கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 44,000 பேருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
உங்களுக்கு கோல்டன் விசா கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதை எளிமையாகத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.