UAE Tamil Web

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு.. Golden Visa வழங்கி கௌரவித்த அமீரகம் – நன்றி கூறி வெளியிட்ட ட்வீட்!

தமிழ் திரையுலகில் தங்களுக்கென்று தனி முத்திரை படைக்கும் இயக்குனர்களின் வரிசையில் நிச்சயம் வெங்கட் பிரபு அவர்களுக்கும் ஒரு சிறந்த இடமுண்டு. பல ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்தாலும் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான சென்னை 28 என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

2002ம் ஆண்டு ஸ்டான்லி என்ற புதுமுக இயக்குனர் இயக்கி பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் தான் இவர் நடித்த முதல் திரைப்படம். தனது 15வது வயதில் 1990ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான அஞ்சலி என்ற படம் மூலம் தான் இவர் முதன்முதலில் பாடகராக அறிமுகமானார்.

2011ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான். அதன் பிறகு பல படங்களை இயக்கிய இவர் தற்போது நாக சைதன்யாவை வைத்து தற்போது ஒரு தெலுங்கு படத்தை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு நமது அமீரகம் சார்பாக தற்போது Golden Visa வழங்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததோடு, கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளார்.

ஏற்கனவே பல தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி திரையுலக நடிகர் நடிகைகளுக்கு நமது அமீரக அரசு Golden Visa வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் தத், ஷாருகான், மோகன்லால், மம்மூடி, விஜய் சேதுபதி, மீனா உள்ளிட்ட பலர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap