UAE Tamil Web

* அமீரக மக்களே.. இனி ஏகப்பட்ட App-களை டவுன்லோட் செய்ய வேண்டாம்.! அனைத்து அரசு சேவைகளும் உங்கள் விரல் நுனியில்.!! விரைவில் வருகிறது “சூப்பர் App”

app

நாட்டிலுள்ள அனைத்து சேவைகளுக்குமான ஒரு ஒருங்கிணைந்த பயன்பாட்டை(app) அறிமுகப்படுத்த அமீரக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கையை அமீரகம் எடுத்து வருகிறது.

- Advertisment -

ஒரு ஒருங்கிணைந்த போர்டல் மற்றும் App-ஐ பயன்படுத்துவதன் மூலம் ஃபெடரல் நிறுவனங்கள் வழங்கும் அனைத்து சேவைகளையும் குடியிருப்பாளர்கள் எளிதாக அணுகலாம். இது தொடரபாக தகவல் தெரிவித்துள்ள அமீரக அரசின் மூத்த அதிகாரி ஒருவர், அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய சேவைகள் மூலம் விசா மற்றும் லைசென்ஸ் புதுப்பித்தல் மற்றும் பயன்பாட்டு பில்கள் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

பட்டனை கிளிக் செய்வதன் மூலம் குடியிருப்பாளர்கள் சில தனியார் துறை வழங்கும் சேவைகளையும் அணுகலாம் என்று அவர் கூறினார். வாடிக்கையாளர்கள் எங்கு சேவைகளை பெறுவது என்று கவலைப்பட அவசியமில்லாத வகையில், அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து ஓரிடத்தில் ஒருங்கிணைப்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

எல்லா சேவைகளையும் ஒரே ஆன்லைன் தளத்தின் கீழ் ஒருங்கிணைப்பதால் வாடிக்கையாளர்கள் பல App-களை டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டம் மூலம் பல உயர்தர மொபைல் App-களிலிருந்து சூப்பர் தரம் மற்றும் சூப்பர் எளிய பயன்பாட்டுடன் கூடிய ஒரு சூப்பர் App-ற்கு மாறுகிறோம் என்று அமீரக அரசாங்கத்திற்கான அரசு சேவைகளின் தலைவர் முகமது பின் தாலியாஹ் கூறியுள்ளார்.

இந்த ஹைபிரிட் சிஸ்டம் நுகர்வோரின் உரிமங்கள் காலாவதியாகும் முன் அவர்களுக்கு அது குறித்த அறிவிப்புகளை முன்னெச்சரிக்கையாக அனுப்பும். மேலும் இந்த சிஸ்டம் நுகர்வோருக்கு அவர்களின் விசாக்கள், பாஸ்போர்ட், உரிமங்கள், கார் இன்சூரன்ஸ் போன்றவற்றை புதுப்பிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டு ஒரு அறிவிப்பை அனுப்பும்.

அவர்கள் உறுதிமொழியில் பதிலளித்தால், நுகர்வோரின் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எங்களிடம் ஏற்கனவே இருப்பின் அந்த ஆவணம் தானாகவே புதுப்பிக்கப்படும். குடியிருப்பாளர்கள் தங்கள் மின்சாரம் அல்லது நீர் கட்டணங்களை செலுத்த App அல்லது வெப்சைட்டிலிருந்து ஒரு எஸ்எம்எஸ் அல்லது அறிவிப்பைப் பெறுவார்கள். அதற்கு ‘ ஆம் ’என்று பதிலளிப்பதன் மூலமோ அல்லது அறிவிப்புக்கு உறுதியுடன் பதிலளிப்பதன் மூலமோ வாடிக்கையாளர்களின் பில்கள் தானாகவே செலுத்தப்பட்டு விடும்.

இந்த போர்டல் அரசாங்க சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது கார் பதிவு நிறுவனங்கள் போன்ற தனியார் துறை நிறுவனங்களுக்கும் ஒரே கிளிக்கில் சேவையை வழங்க உதவுகிறது.

2 புதிய தளங்கள்..

மேலும் பேசிய அதிகாரி தாலியாஹ், அண்மையில் ‘உஸ்ரதி’(Usrati) மற்றும் ‘பாஷர்’(Basher) எனப்படும் இரண்டு தளங்களை “புதுமையான அரசு சேவைகளின் புதிய மாதிரிகள்” என்று உருவாக்கியதாக கூறினார்.

இதில் உஸ்ரதி இயங்குதளம் 10 அரசு நிறுவனங்களிலிருந்து நடைமுறையில் உள்ள 12 சேவைகளை வழங்குகிறது. இது திருமணம், பெற்றோர் மற்றும் குழந்தை பராமரிப்பு பற்றிய கருத்துக்களை ஊக்குவிக்கிறது.

பாஷர் தளம் 18 ஃபெடரல் மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்களின் 14 சேவைகளை வழங்குகிறது. வணிகங்களை அமைக்க, வணிக உரிமங்களை பெற ஒரு டிஜிட்டல் அனுபவத்தை உறுதியளிக்கிறது. எந்தவொரு ஆவண சமர்ப்பிப்புகளும் இல்லாமல், சேவை மையங்களுக்குச் செல்லாமல் முதலீட்டாளர்களை உடனடியாக ஒரு தொழிலைத் தொடங்க இது அனுமதிக்கிறது என்று கூறினார்.