34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

உலகின் மிகவும் நம்பகமான அரசின் பட்டியல் வெளியீடு.! அமீரகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

dubai

எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டரில் (Edelman Trust Barometer) என்பது நியூயார்க்கில் எடெல்மேன் புலனாய்வு (Edelman Intelligence) நடத்தும் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் வருடாந்திர கணக்கெடுப்பு ஆகும்.

2020 எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டரில் (Edelman Trust Barometer) முதலிடத்தைப் பிடித்து, ஐக்கிய அரபு அமீரகம், தனது குடிமக்களால் போற்றக்கூடிய உலகின் மிகவும் நம்பகமான அரசாங்கமாக வாக்களிக்கப்பட்டுள்ளது.

28 நாடுகளில் 34,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்களுடன் நடத்தப்பட்ட 2020 எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டர் (Edelman Trust Barometer), ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்ளூர் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைக்கு 83 புள்ளிகளும், மத்திய அரசு மீதான நம்பிக்கைக்கு 81 புள்ளிகளும் பெற்று முதலிடத்தைப் பிடித்து தந்துள்ளது.

மத்திய அரசு மீதான நம்பிக்கைக்காக 83 புள்ளிகளைப் பெற்ற இந்தியாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் நெருக்கமாக இருந்தது. ஆனால் உள்ளூர் அரசாங்கத்தின் நம்பிக்கையில் 79 புள்ளிகள் மட்டுமே பெற்றதால், இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2020 general pop
The Trust Index: Who ranks where?

அதுமட்டுமில்லாமல் குளோபல் டிரஸ்ட் இன்டெக்ஸ் இந்த ஆண்டு 53 புள்ளிகளிலிருந்து 1 புள்ளி அதிகரித்து, 54 ஆக முன்னேறியுள்ளது மற்றும் அளவிடப்பட்ட 26 சந்தைகளில், 16-க்கு அதிகரித்துள்ளது. கூடுதலாக, ஐக்கிய அரபு அமீரகம், பொது நம்பிக்கைக் குறியீட்டில் 65 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது.

இந்த குறியீடு அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சியின் வெவ்வேறு பாதைகளை அளவிடுகிறது.

உள்ளூர் அரசாங்கங்களின் தரவரிசை:

local government

இதையும் படிங்க.!