UAE Tamil Web

காரின் வேகத்தால் தூக்கிவீசப்பட்ட 10 வயது இந்திய சிறுவன் – சிகிச்சை பலனிக்காமல் பறிபோன உயிர் – கண்ணீரில் குடும்பம்..!

Indian kid

ஷார்ஜாவின் இந்தியா இண்டர்நேஷனல் பள்ளியில் 5 ஆம் வகுப்புப் படித்துவந்த அப்துல்லா சமீர் காஸி விபத்தில் உயிரிழந்திருப்பது பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மே 24 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகேயுள்ள ஜெராக்ஸ் கடைக்குச் சென்ற சிறுவன் மீது கார் ஒன்று மோதியிருக்கிறது. உடனடியாக யூனிவெர்சிட்டி மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். இரண்டு வாரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் சிகிச்சை பெற்றுவந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமையன்று சமீர் உயிரிழந்திருக்கிறான்.

PACE கல்விக் குழுமத்தின் தலைவர் P.A.இப்ராஹீம் ஹாஜி இதுகுறித்துப் பேசுகையில்,” இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். மரணமடைந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு எங்களுடைய இரங்கலைத் தெரிவித்தோம். சிறுவனுடைய இழப்பைத் தாங்குவதற்கான மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டும்” என்றார்.

பள்ளியின் இயக்குனர் சல்மான் இப்ராஹீம், மூத்த இயக்குனர் ஆசிப் முகமது, பள்ளியின் முதல்வர் மஞ்சு ரெஜி பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோர் சிறுவனின் வீட்டிற்குச் சென்று பாதிக்கப்பட்ட பெற்றோரிடையே தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

முதல்வர் மஞ்சு ரெஜி இதுகுறித்துப் பேசுகையில்,” படிப்பு மற்றும் பிற பிரிவுகளிலும் அப்துல்லா சிறந்து விளங்கினான். முதலாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து எனக்கு அவனைத் தெரியும். இது ஈடுசெய்யமுடியாத இழப்பு” என்றார்.

வியாழக்கிழமை ஸோகர் தொழுகைக்குப் பிறகு சிறுவனின் இறுதிஊர்வலம் நடைபெற்றது. அப்துல்லாவின் தம்பி (ஒன்றாம் வகுப்பு), மூத்த சகோதரர் (9 ஆம் வகுப்பு) அதே பள்ளியில் படித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Indian kid
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap