UAE Tamil Web

1 லட்சம் பேருக்கு 10 வருடங்களுக்கான கோல்டன் விசா – துபாய் ஆட்சியாளரின் அதிரடி அறிவிப்பு..!

golden visa

குறிப்பிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்களை அமீரகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கோல்டன் விசாவினை அமீரக அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. இதுவரை பல்வேறு பிரிவுகளில் பல நாட்டினைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த விசாவானது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கணினி நிரலாக்கப் (Coding) பணியில் தலைசிறந்து விளங்கும் 1 லட்சம் பணியாளர்களுக்கு (Coders) கோல்டன் விசாவை வழங்க இருப்பதாக அமீரக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்டுள்ளார்.

1000 பெரிய டிஜிட்டல் நிறுவனங்களை அமீரகத்தில் உருவாக்குதல், டிஜிட்டல் சந்தையை கட்டமைத்தல், வளர்ந்துவரும் பெரு நிறுவனங்களின் உலகளாவிய தேவைகளுக்கான இடமாக அமீரகத்தை மாற்றுதல் ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைதூர பணி பயன்பாடுகளுக்கான மாநில அமைச்சர் சுல்தான் அல் ஓலாமா இதுகுறித்துப் பேசுகையில்,” அமீரகத்தின் வெற்றிக்கதையை எதிர்காலத்தில் தொடர்ந்து எழுத தகுதியும் திறமையும் இருப்பவர்களுக்கு அமீரகத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அடுத்த தலைமுறையை அறிவியல் தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் செழிப்பாக்கும் என்ற நம்பிக்கையும் திறமையும் உள்ளவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பாகும்” என்றார்.

உலகமெங்கிலும் கோடிங் துறையில் சிறந்து விளங்குபவர்களை ஈர்க்கும் நோக்கிலும் இத்தகைய நபர்கள் அமீரகத்தில் புதிய தொழில் துவங்கி நாட்டின் வேலைவாய்பு மற்றும் வளர்ச்சியில் பங்கெடுக்க தேவையான இடத்தை அவர்களுக்கு அளிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமீரகத்தில் கோல்டன் விசாவைப் பெறும் கோடர்கள் ஒருங்கிணைந்த பணிகளில் ஈடுபட கோடர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம் ( National Program for Coders) உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விசா கோரி, அமீரக அரசாங்கத்தின் செயற்கை நுண்ணறிவு அலுவலகம் அல்லது அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள எந்த நாட்டினரும் இந்த கோல்டன் விசாவிற்காக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசாக்களுக்கென்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த கோடர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முன்னோடியாக பணியாற்றுவோர், கோடிங்கில் நிபுணத்துவம் பெற்ற மென்பொருள் பொறியியல், கணினி அறிவியல், வன்பொருள் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், பிக் டேட்டா மற்றும் மின் பொறியியல் ஆகியவற்றின் பட்டதாரிகள் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட இருக்கிறது.

golden visa
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap