UAE Tamil Web

30 நாள் அவகாசம் தருகிறோம்.. தடுப்பூசி போட்டுக்கோங்க.. அமீரக அரசின் புதிய அறிவிப்பு..!

Stock-University-students-campus_

அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி எடுத்துக்கொண்ட மற்றும் தடுப்பூசி எடுக்காத மாணவர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறை பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்ட நாள் முதல் 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் எனவும் இதில் மாணவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விருப்பப்படும் பட்சத்தில் ஆன்லைன் வழியான வகுப்புகளைத் தொடரலாம் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக வெளிவந்த அறிவிப்புகள்

இந்த மாத துவக்கத்தில் பள்ளிக்குத் திரும்ப விரும்பும் மாணவர்கள் அனைவரும் (16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர்) கண்டிப்பாக தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், ஷார்ஜாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும் கல்வியாண்டு துவக்கத்தில் அவர்கள் நெகட்டிவ்PCR பரிசோதனை சான்றிதழை சமர்ப்பித்தால் போதும் என சார்ஜா கல்வித் துறை தெரிவித்திருந்தது.

தடுப்பூசி எடுத்துக் கொள்வதிலிருந்து விளக்கு பெற்ற மாணவர்கள் அதற்கான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Stock-University-students-campus_
3 Shares
Share via
Copy link