UAE Tamil Web

அமீரகத்தில் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம்!

சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி அபுதாபியில் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் துப்பாக்கிகளும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் கண்காட்சியில் துப்பாக்கிகள் வாங்கவோ அல்லது லைசன்ஸ் பெற விரும்புவோர் 21 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிகளை வாங்க உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிப்போரின் முழு பின்னணியும் ஆராய்ந்த பிறகே லைசன்ஸ் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வெளிநாட்டினர் அவர்களின் சொந்த நாட்டின் அனுமதியை பெற்றிருந்தால் துப்பாக்கிகளை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

9 Shares
Share via
Copy link