UAE Tamil Web

அமீரகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்..!

Heavy-rain-in-Al-Ain-on-September-
  1. ஓமானை நெருங்குகிறது ஷஹீன் புயல்

இந்தியா – பாகிஸ்தான் கடல்பகுதியில் உருவான ஷஹீன் புயல் வடமேற்கு ஓமான் கடலில் நகர்ந்து வருவதாக அமீரக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. புயலின் மையப்பகுதி புஜைராவிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதன்காரணமாக நாளை மறுநாள் வரையில் அமீரகத்தில் அசாதாரண வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  1. வானிலை குறித்த அவசரத் தேவைகளுக்கான உதவி எண்ணை வெளியிட்டது துபாய் முனிசிபாலிட்டி

ஷஹீன் புயல் காரணமாக ஏற்படும் அவசர தேவைகளுக்காக மக்கள் 800900 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம் என துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. அதேபோல துபாய் முனிசிபாலிட்டி அப்ளிகேஷன் வாயிலாகவும் மக்கள் உதவியைப் பெறலாம்.

  1. தேவைப்பட்டால் வேலையை நிறுத்துங்க – ஷஹீன் புயலை முன்னிட்டு கம்பெனிகளுக்கு உத்தரவிட்ட அமீரக அரசு..!

ஷஹீன் புயல் அமீரகத்தின் சில பகுதிகளையும் தாக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இதனால் அமீரகத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கு அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில், தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தேவைப்படும்பட்சத்தில் வேலையை நிறுத்தலாம் எனச் சுட்டப்பட்டுள்ளது.

  1. தீவிரமடையும் ஷாஹீன் புயல் : கடற்கரை, தாழ்வான பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கும் அரசு..!

ஓமானில் கரையைக் கடக்க இருக்கும் ஷாஹீன் புயல் மணிக்கு 116 – 140 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் அமீரகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வசிப்போர் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், கடற்கரைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு மக்கள் செல்லவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  1. எக்ஸ்போ 2020 ஐ பார்வையிட்ட துபாய் ஆட்சியாளர்..!

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியலருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது இன்றைய எக்ஸ்போ 2020 பயணத்தின்போது குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பெவிலியன்களைப் பார்வையிட்டார்.

  1. எக்ஸ்போ 2020 ல் அமைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் பெவிலியனுக்குள் பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது..!

ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட துபாய் எக்ஸ்போ 2020 க்கான ஆப்கானிஸ்தான் பெவிலியனுக்குள் நுழைய மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. ஆட்சிமாற்றத்தினால் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

  1. அமீரகத்தில் இன்று கொரோனவால் உயிரிழப்பு இல்லை..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 331 பேர் குணமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

Heavy-rain-in-Al-Ain-on-September-
1 Share
Share via
Copy link