UAE Tamil Web

“உங்க குடும்பத்தோடு கொஞ்சநாள் இருந்துட்டு வாங்க” – மருத்துவர்களுக்கு இருவழி விமான டிக்கெட்டை இலவசமாக அளிக்கும் அமீரக அரசு..!

Doctors-covid

இப்படி ஒரு கொள்ளை நோய் இப்பூமியை வாட்டும் என்றோ, நம் உறவினர்கள், நண்பர்கள் பலரை இந்த கொரோனா என்னும் ஆழிப்பேரலையில் பறிகொடுப்போம் என்றோ நம்மில் யார்தான் நினைத்திருப்போம்?

மருத்துவமனை, ஆக்சிஜன், நுரையீரல் என கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்மை உலுக்கும் பல வார்த்தைகளைக் கடந்து வந்திருக்கிறோம். இன்று அமீரகம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் இடத்தை அடைந்திருக்கிறது. பெரும் ஓட்டம் ஒன்றில் கிடைத்த இளைப்பாறல் போன்றது அது. இதற்குக்காரணம் சந்தேகமே இல்லாமல் அமீரகத்தின் மருத்துவர்கள் தான்.

குடும்பம், குழந்தைகள் என அத்தனையையும் துறந்து எனது நாட்டிற்காக, எனது மக்களுக்காக என அரசின் அத்தனை முயற்சிகளையும் தங்களது தோளில் சுமந்து அமீரகத்தையும் அதன் மக்களையும் கொரோனாவில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

இம்மருத்துவர்களின் பிரம்மிக்கத்தக்க உழைப்பிற்கு பரிசளிக்கும் விதமாக அபுதாபி சுகாதார நிறுவனமான சேஹா, மருத்துவர்களுக்கு இலவச இருவழி டிக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் பலநாட்கள் தங்களது குடும்பத்தினரைப் பிரிந்து வாடும் மருத்துவர்களை அவர்களது அன்புக்குரியவர்களிடம் சேர்க்க சேஹா பாதை சமைத்துக்கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து செஹா வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” இந்த அங்கீகாரத்திற்கு அவர்கள் (மருத்துவர்கள்) முழுவதும் தகுதியானவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேஹாவின் இந்த அறிவிப்பிற்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Doctors-covid
1 Share
Share via
Copy link
Powered by Social Snap