ஈராக்கின் மோசுல் நகரில், நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக சேதமடைந்த இஸ்லாமிய மசூதியின் கோபுரமும், கிறிஸ்தவ சர்ச்சுகளும் அடுத்தமாதம் திறக்கப்படவுள்ளதாக UNESCO அமைப்பு அறிவித்துள்ளது.
ஐநா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCOவின் முயற்சியால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈராக்கின் மோசுல் நகர் புணரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அமீரகத்தின் உதவியுடன் மோசுல் நகரின் அல் ஹத்பா மசூதி கோபுரமும், அல்-ஷா மற்றும் அல்-தஹிரா உட்பட கிறிஸ்தவ சர்ச்சுகளும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று அமைப்பின் உயர் அதிகாரி எர்னெஸ்டோ ரமீரெஸ் தெரிவித்தார்.
மோசுல் நகரின் பாரம்பரியச் சின்னங்களையும், கல்வி, மற்றும் கலாச்சார வாழ்வையும் மீண்டும் பழையபடி கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் UNESCO நிறுவனம் 2018ஆம் ஆண்டு, கட்டுமான புதுப்பித்தல் பணிகளைத் துவக்கியது.
மோசுல் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களைப் புதுப்பிக்க உதவ அமீரகம் முதன்முதலில் முன்வந்த வேளையில், 122 சரித்திர புகழ்வாய்ந்த இடங்களையும் புதுப்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி வழங்கவுள்ளதாக கூறியுள்ளது.
