UAE Tamil Web

அமீரகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..!

petrol

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 மார்ச் மாதம் முதல் எரிபொருள் விலை உயர்த்தப்படுவதாக எரிபொருள் விலை நிர்ணய குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பதை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 1.91 திர்ஹம்ஸாக இருந்த சூப்பர் 98 பெட்ரோல் விலை மார்ச் மாதம் 2.12 திர்ஹம்ஸாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 1.80 ஆக இருந்த ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை மார்ச் மாதத்தில் 2.01 திர்ஹம்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 2.01 திர்ஹம்ஸாக இருந்த டீசல் விலை மார்ச் மாதத்தில் 2.15 திர்ஹம்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது.

petrol
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap