ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கான விடுமுறை அறிவிப்பு…!

UAE holidays: Cabinet approves new list for 2019-20

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் தனியார் துறைகளுக்கான விடுமுறைக்கு அமைச்சரவை (வியாழக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் நவம்பர் 9, அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை நாளாகவும், டிசம்பர் 1 நினைவு தினத்திற்கான விடுமுறையாகவும், டிசம்பர் 2-3 தேசிய தினத்திற்கான விடுமுறையாகவும் இருக்கும் என்று அமீரக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை விடுமுறை நாட்களின் பட்டியல் பின்வருமாறு:

  • புத்தாண்டு: ஜனவரி 1
  • ஈத் அல் பித்ர்: ரமலான் 29 – ஷவ்வால் 3
  • அராபத் நாள்: துல் ஹிஜ்ஜா 9
  • ஈத் அல் ஆதா: துல் ஹிஜ்ஜா 10-12
  • இஸ்லாமிய புத்தாண்டு: ஆகஸ்ட் 23
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள்: அக்டோபர் 29
  • நினைவு நாள்: டிசம்பர் 1
  • தேசிய நாள்: டிசம்பர் 2-3