UAE Tamil Web

அமீரகத்தில் ரமலானுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? மகிழ்ச்சியில் குடியிருப்பாளர்கள்!

Ramzan

அமீரகத்தில் ரமலான் பண்டிக்கைக்கு, குடியிருப்பாளர்கள் 5 நாட்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமீரத்தில் புதிய வார விடுமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அரசு பணியாளர்களுக்கு வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை, மற்ற இரண்டரை நாட்கள் விடுமுறை என்ற புதிய சட்டத்தை ஜனவரி 1 முதல் அமீரகம் கொண்டு வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம், சனி, ஞாயிறு என மொத்தம் இரண்டரை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. குடியிருப்பாளர்கள் இப்போது வெள்ளி-சனிக்கிழமைகளுக்குப் பதிலாக சனி-ஞாயிறு இடைவெளிகளைத் திட்டமிடுகின்றனர்.

இந்நிலையில், புத்தாண்டை அடுத்து, நோன்பு பெருநாளுக்கு மே மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமீரகத்தில் புனித ரமலான் மாதம் ஏப்ரல் 2, 2022 அன்று தொடங்க வாய்ப்புள்ளதாக சர்வதேச வானியல் மற்றும் விண்வெளி ஆணையத்தின் ஒன்றிய உறுப்பினர் இப்ராஹிம் அல்-ஜர்வான் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய மாதங்கள் பிறையைப் பார்ப்பதைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். இந்த ஆண்டு, ரம்ஜான் மே 1 வரை 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் மே 2 இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ரின் முதல் நாளாக இருக்கும்.

அமீரக நாட்காட்டியின்படி, குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறைகள் ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை இருக்கும். ரமலான் 29 நாட்கள் நீடித்தால், குடியிருப்பாளர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். புனித மாதம் 30 நாட்கள் நீடித்தால், ஐந்து நாள் விடுமுறையாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தாண்டு ரம்ஜான் 30 நாட்கள் நீடிக்கும் என்பதால், குடியிருப்பாளர்கள் ஐந்து நாள் விடுமுறையை அனுபவிக்கலாம். வானியல் ரீதியாகப் பார்த்தால், ஏப்ரல் 30 – மே 4 வரை விடுமுறை நாட்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தினங்களில், ரமலான் நோன்பு தொடங்க வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில், பிறையைக் கண்டப்பின் தான் சரியான தேதியை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

12 மாத ஹிஜ்ரி நாட்காட்டியில் ரமலான் மிகவும் புனிதமானது. இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் விடியற்காலை முதல் மாலை வரை உணவு மற்றும் பானங்களைத் தவிர்ப்பார்கள்.

ஈத் அல் பித்ர் என்பது ரமலானின் முடிவைக் குறிக்கிறது. ஷவ்வால் என்பது இஸ்லாமிய நாட்காட்டியில் ரமலானுக்கு பிறகு வரும் மாதமாகும். ரமலான் பெருநாள் காலையில் சிறப்பு தொழுகையுடன், விருந்து மற்றும் இனிப்புகளுடன் கொண்டாடப்படுகிறது.

Ramzan
9 Shares
Share via
Copy link