அமீரகம் இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் உட்பட பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் இந்திய படங்களிலும் மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் குடிமக்களாக கருதப்படுவார்கள். இவர்கள் அமீரகத்தில் அனுமதி இன்றி தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை பெறலாம்.
இந்நிலையில், தற்போது நடிகையும் பாடகருமான ஆண்ட்ரியாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட ஆண்ட்ரியா, துபாயில் நடக்கும் EXPO கலந்துகொண்டு யுவன் சங்கர் ராஜா நடத்திய இசை நிகழ்ச்சி பங்கு பெற்று பாடினார்.
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மீனாவுக்கும் கோல்டன் விசா வழங்கி அமீரகம் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.