அமீரத்தின் கோல்டன் விசா எளிதில் யாருக்கும் கிடைக்காது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கோல்டன் விசா கௌரவத்தை அமீரகம் அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்திய படங்களிலும் மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தில் அனுமதி இன்றி தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை பெறலாம்.
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் அமீரக சிட்டிசன்களுக்கு போலவே கருதப்படுவார்கள். இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் வரை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமீரகம், விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது. விஜய்சேதுபதியின் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாக நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.