UAE Tamil Web

முக்கியச் செய்தி: பற்றியெரிந்த எண்ணெய் தொழிற்சாலை ; இழப்பு எவ்வளவு?

-fire-RAK_

ராஸ் அல் கைமாவின் அல் ஜசீரா அல் ஹம்ரா பகுதியில் இயங்கிவந்த எண்ணெய் தொழிற்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ராஸ் அல் கைமா, உம் அல் உவைன் சிவில் பாதுகாப்புப் படை, மீட்புகுழுக்கள் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. துரிதமாக செயல்பட்ட வீரர்கள் தீயினைக் கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தினால் உயிரிழப்போ யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்புத்துறை இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அப்துல்லா அல் சாபி தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து நிபுணர்கள் நடத்திவரும் ஆய்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதான் தெரியவரும் என அவர் குறிப்பிட்டார்.

தீயணைப்பு பணியில் உதவிபுரிந்த மின்சார யூனியன், தேசிய ஆம்புலன்ஸ், ராஸ் அல் கைமா காவல்துறை ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக சாபி தெரிவித்தார்.

-fire-RAK_
0 Shares
Share via
Copy link