UAE Tamil Web

காபியில் உப்பைக் கொட்டிய மனைவியின் மண்டையைப் பிளந்த கணவன் – ஷார்ஜாவில் பரபரப்பு..!

ஷார்ஜா நன்னடத்தைகளுக்கான நீதிமன்றத்தில் 42 வயது அரபு ஆண் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நடந்தது இதுதான். மனைவியிடம் இவர் காபி கேட்டிருக்கிறார். தவறுதலாக சர்க்கரைக்குப் பதில் காபியில் உப்பை கலந்துகொடுத்துவிட்டார் அவரது மனைவி.

இதனால் சண்டை எழுந்து, பிரச்சினை பெரிதாகி ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கணவன், இரும்புக் கம்பியை எடுத்து தனது மனைவியின் பின் தலையில் பலமாக அடித்திருக்கிறார்.

இதனால், மயங்கி விழுந்த பெண் சிறிது நேரம் கழித்து பார்க்கையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரியவந்திருக்கிறது. உடனடியாக ஆம்புலன்சை அழைத்து மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

தனது கணவன் குறித்து காவல்துறையில் புகாரளித்த அப்பெண்,” வேலைப்பளு காரணமாக தவறுதலாக காபியில் உப்பை கலந்துவிட்டேன். அவருக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது. அதுகுறித்து கேள்வி கேட்கவே தான் அவர் என்னை அடித்தார். அவரிடமிருந்து விவாகரத்தும் என்னுடைய குழந்தையை என்னிடமே ஒப்படைக்க வேண்டும்” எனவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்மீதுள்ள குற்றத்தை எதிர்த்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் அளித்திருக்கிறது.

3 Shares
Share via
Copy link