கொரோனா பரவல் காரணமாக நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைய உலக நாடுகள் பல கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. ஒருசில நாடுகள் நேரடியாக தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளதோடு ஏராளமான நாடுகள் 14 நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகோ அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்டாலோ அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில் அண்மையில் பிரிட்டன் அரசு சார்பில் வெளியிடப்பட்ட புதிய Red List பட்டியலில் அமீரகம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Red List பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர் 10 நாட்களுக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது பிரிட்டனின் Red List பட்டியலில் இடம்பெறாத நாடுகளில் 11 நாட்கள் தங்கிவிட்டு நேரடியாக பிரிட்டனுக்குள் நுழையலாம். அமீரகத்தை தொடர்ந்து பஹ்ரைன், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகளும் பிரிட்டனின் Red List பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
