UAE Tamil Web

அடுத்த மாதம் முதல் இந்தியாவிற்கு விமானம் ; அதுவும் 499 திர்ஹம்ஸில் – ஏர் அரேபியாவின் புதிய அறிவிப்பு..!

air arabia

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் ஏர் அரேபியா அபுதாபி விமான நிறுவனம், நவம்பர் முதல் வாரத்திலிருந்து இந்தியாவிற்கு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதுவும் ஒரு டிக்கெட்டின் விலை 499 திர்ஹம்ஸ் மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியிலிருந்து இயக்கப்படும் விமானங்கள் கேரளாவின் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டிற்கு செல்லும் என அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதன்படி, அபுதாபியில் இருந்து கொச்சிக்கு முதல் விமானம் நவம்பர் 3 ஆம் தேதி இரவு 10.55 மணிக்கு இயக்கப்பட இருக்கிறது. அபுதாபி – கோழிக்கோடு இடையிலான விமானம் நவம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கும் அபுதாபி – திருவனந்தபுரம் இடையிலான விமானம் நவம்பர் 16 அன்று இரவு 1.15 மணிக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவை ஏர் அரேபியாவின் இணையதளத்திலேயே மேற்கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

air arabia
8 Shares
Share via
Copy link