கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அபுதாபி அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமான நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த சேவையை நவம்பர் 4 ஆம் தேதிமுதல் துவங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 4 ஆம் தேதி, IX 0335 விமானம் கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து கிளம்பி அல் அய்ன் விமான நிலையத்திற்கு பிற்பகல் 12.25 மணிக்கு வந்தடையும்.
மீண்டும் அல் அய்ன் – கோழிக்கோடு பயணம் (IX 0336) மதியம் 1.25 மணிக்கு துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பயணத்தை மீண்டும் துவங்குவதால் அமீரகம் – இந்தியா இடையேயான டிக்கெட் கட்டணத்தை 392 ஆக நிர்ணயித்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.
இந்த அறிவிப்பினால் பல அமீரக வாழ் இந்தியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
