UAE Tamil Web

இம்மாத இறுதிவரையில் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு விமானங்கள் இயக்கப்படாது : எதிஹாட் அறிவிப்பு..!

Etihad_Air_

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் ஏர்வேஸ் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கான தடை ஜூலை 31 ஆம் தேதிவரையில் தொடரும் என அறிவித்துள்ளது.

மும்பை, கராச்சி, டாக்கா ஆகிய இடங்களில் இருந்து அமீரகத்திற்கு வர டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற தங்களது வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டரில் இந்தத் தடை நீட்டிப்பு குறித்து இந்நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

அரசு அதிகாரிகள், கோல்டன் விசா வைத்திருப்போருக்கு மட்டும் இந்தத் தடையில் விலக்கு உண்டு எனவும் அவர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா சான்றிதழை வைத்திருக்கவேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்திற்கான இடைக்காலத்தடை ஜூலை 21 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை எதிஹாட் வெளியிட்டிருக்கிறது.

அமீரக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் மீண்டும் இந்தியா – அமீரகம் இடையே விமானம் இயக்கப்படும் தேதி குறித்து எவ்வித அறிக்கையயும் இதுவரையில் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

Etihad_Air_
0 Shares
Share via
Copy link