UAE Tamil Web

ஆகஸ்டு 3 முதல் இந்தியா – அமீரகம் இடையே விமானம் இயக்கப்படுமா? – பதிலளித்த எதிஹாட்..!

Etihad_Air_

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்துத் தடை ஆகஸ்டு 2 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆகஸ்டு 3 ஆம் தேதிமுதல் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு விமானங்கள் இயக்கப்படுமா? என எதிஹாட் நிறுவனத்திடம் பயணி ஒருவர் டிவிட்டரில் கேள்வி கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த எதிஹாட்,” புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் – அமீரகம் இடையே விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். இதுதொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எங்களது இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இணைந்திருக்கவும்” எனத் தெரிவித்திருக்கிறது.

Etihad_Air_
8 Shares
Share via
Copy link