UAE Tamil Web

அடுத்த 18 வருடத்திற்கு உலகின் பிசியான விமானப் போக்குவரத்து அமீரகம்- இந்தியா இடையேதான் நடைபெறும் – IATA தகவல்..!

Stock-India-airport-Indigo

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (IATA) புதிய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 18 ஆண்டுகளுக்கு அதாவது 2021 – 2039 ஆம் ஆண்டுகளுக்கிடையே உலகின் மிகவும் பிசியான விமான வழித்தடமாக அமீரகம் – இந்தியா இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்த இரு நாடுகளுக்கிடையே பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை 6.9 சதவீதம் அதிகரித்துவருவதே மேலே நீங்கள் படித்ததற்குக் காரணம். இதேகாலகட்டத்தில் உலகளவில் ஆண்டுக்கு 1.5 – 3.6 சதவீதம் வரையிலும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பிசியான வழித்தடமாக சீனா – தாய்லாந்து இருக்கும். இதில் ஆண்டுக்கு 5.6 சதவீத பயணிகள் எண்ணிக்கை உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நிலையில் சீனா – ஜப்பான் வழி இருக்கிறது. இதில் பயணிகளின் எண்ணிக்கை 4.6 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பணிப்பவர்களின் எண்ணிக்கை 6.2 சதவீதம் உயரும். இது உலகின் வேறந்த நாடுகளினாலும் நெருங்கமுடியாத அளவாகும். இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா 5 சதவீதத்துடன் இருக்கிறது. உலகின் மிகப் பெரிய விமான சந்தையைக் கொண்டுள்ள அமெரிக்கா 1.4 சதவீதமே பெற்றிருக்கிறது.

கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையை 2023 ஆண்டு அடையலாம் என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு முந்தைய அளவிற்கான பயணிகள் 2022 ஆம் ஆண்டில் பயணிப்பார்கள்.

கொரோனாவிற்கு முன்பு பயணித்த நபர்களின் எண்ணிக்கையில் 52 சதவீதத்தை இந்தாண்டில் அடையலாம். 2022 ஆம் ஆண்டில் இது 88 சதவீதமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய IATA வின் இயக்குனர் வில்லி வால்ஷ்,” நாட்டின் எல்லைகளைத் திறத்தல், டிஜிட்டல் முறையிலான தடுப்பூசி, பரிசோதனை சான்றிதழ்கள் ஆகியவை தான்  இப்போதுள்ள மிகமுக்கிய சிக்கல். அதே நேரத்தில், நீடித்த உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலமாக விமானப் போக்குவரத்து தனது நீண்டகால இலக்கை அடையும் என்பதை உலகிற்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம்” என்றார்.

Stock-India-airport-Indigo
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap