UAE Tamil Web

அமீரகத்திலிருந்து கேரளா செல்வோர் கவனம் : ஏர் இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Air-India

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வருபவர்கள் PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டிய தேவையில்லை என ஏர் இந்தியா நிறுவனம் இன்று காலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்கள் கட்டாயம் PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்குள் பயணிப்பவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும் என ஏர் இந்தியா தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிராந்திய மேலாளர் பிபி.சிங்,” இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருவோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருக்கும் பயணிகள் PCR பரிசோதனை எடுத்திருக்க தேவையில்லை. இது வெளிநாட்டினருக்கு பொருந்தாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் இதுகுறித்த தகவல்களை கேட்டுப் பெற்றதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

Air-India
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap