அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் ஏர் அரேபியா அபுதாபி இந்தியாவின் டெல்லிக்கு வாரத்திற்கு 4 விமான சேவைகளை நவம்பர் 24 ஆம் தேதிமுதல் துவங்க இருக்கிறது.
திங்கள், புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களில் காலை 10.35 மணிக்கு அபுதாபியில் கிளம்பும் இவ்விமானம் மதியம் 3.20 மணிக்கு தில்லியைச் சென்றடையும். மீண்டும் அதே நாட்களில் மாலை 4 மணிக்கு தில்லியில் இருந்து கிளம்பி 6.40 மணிக்கு டெல்லியை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ஏர் அரேபியாவின் 16 வது ரூட் இதுவாகும். மேலும், இந்தியாவின் கொச்சின், திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டிற்கு இம்மாத துவக்கம் முதல் விமானங்களை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட இடங்களுக்கு 499 திர்ஹம்ஸ் விலையில் டிக்கெட்டை விற்பனை செய்துவரும் இந்நிறுவனத்தையே பெரும்பாலும் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறார்கள் டிராவல் ஏஜென்சிக்கள்.